கொரோனா எதிரொலி : நடிப்பை விட்டு, சிறை கைதிகளுடன் சேர்ந்து 'மாஸ்கு'கள் தைக்கும் பிரபல நடிகர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நடிப்பை விட்டு, கைதிகளுடன் சேர்ந்து 'மாஸ்கு'கள் தைக்கும் பிரபல நடிகர் Popular Actor turns into tailor along with prisoners to stitc

இந்நிலையில் மலையாள சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான இந்திரன்ஸ் பற்றிய செய்தி தான் இது. பல படங்களில் நகைச்சுவை மற்றும் குண சித்திர வேடங்களில் நடித்தவர் இவர். தற்போது கொரோனா காரணமாக தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பலரும் மாஸ்க், கையுறை போன்ற உபகரணங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அப்படி பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த சிறு உதவி செய்யும் பொருட்டு மாஸ்குகள் செய்யும் வேளையில் இறங்கி உள்ளார். பூஜப்புரா சென்ட்ரல் ஜெயிலில் அவர் கைதிகளுக்கு இந்த பயிற்சியை அளித்து வருகிறார். மேலும் மக்கள் வீட்டிலேயே 'மாஸ்க்' தயாரிப்பது எப்படி என்று செய்முறை விளக்கமாக இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

நடிப்பை விட்டு, கைதிகளுடன் சேர்ந்து 'மாஸ்கு'கள் தைக்கும் பிரபல நடிகர் Popular Actor turns into tailor along with prisoners to stitc

People looking for online information on Corona, Covid19, Indrans, Mask will find this news story useful.