உலக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்திகள் மக்களை கலக்கமடையச் செய்துள்ளது.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அதிலிருந்து மீண்டு வர இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை திரையுலகினர் ஒன்றிணைந்து கூட்டுப் பிராத்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர் முற்றிலும் குணமாகி மீண்டு வர நாமும் பிராத்திப்போம்.
இந்நிலையில் ஸ்பானிஷ் நடிகர் ஆண்டனியோ பந்தெராஸ் (Antonio Banderas) கடந்த திங்கட்கிழமை தனது 60வது பிறந்தநாளின் போது தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறித்து அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.