உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எனினும் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டு நாளுக்கு நாள் துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாது உலகம் முழுதும் இருக்கும் கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவதும் 2020-ம் ஆண்டின் சூழ்ச்சியாக உள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு துக்க செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் சுரேந்திர பந்த்வால் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 39 வயதாகும் அவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் உடல் முழுவதும் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். பண தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்கள் கூறுகையில் இவர் நிழல் உலக ரவுடியாகவும் செயல்பட்டு வந்துள்ளார். தடவியல் நிபுணர்கள், மோப்ப நாய்களும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து விசாரணை சூடுபிடித்துள்ளது.
https://twitter.com/ANI/status/1318857553241993222