உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இதனை அடுத்து பல துக்க செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். மேலும் பல நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் அடுத்தடுத்த மரணித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மன அழுத்தம் காரணமாக பல தற்கொலைகளும் நடந்து வருவது சோகம் அளிக்கிறது.
மறைந்து நடிகர் கலாபவன் மணி அவர்களின் சகோதரரும், நடிகருமான RLV ராமகிருஷ்ணன் தற்போது தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகமான தூக்க மாத்திரைகளை உண்ட அவர் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோகினி ஆட்டத்தில் சிறந்து விளங்கிய அவரை கேரள சங்கீத நாடக அகாடமி, சாதிப்பிரிவு காரணமாக பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று முதல்கட்டமாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மேலும் பேச முடியாத நிலையில் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.