பிரபல தனியார் ரேடியோ சேனலின் தொகுப்பாளர் மிர்ச்சி விஜய். ரேடியோ மிரச்ச்சி சேனலில் ஆர்ஜேவாக இருந்து வந்த இவரது குரல் பலருக்கும் பரிட்சயமான குரல் தான். பலரின் மனதை கொள்ளை கொண்ட மிர்ச்சி விஜய் பின்னர் தொலைக்காட்சியிலும் கலக்கினார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் கிட்ஸ், நம்ம ஊரு கலரு, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜேவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் விஜய்.
மேலும் இவர் பல்வேறு விழாக்களிலும் தொகுப்பாளராக பணியாற்றினார். அவ்வளவு ஏன் கடந்த வருடம் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இவர் தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் 'நான் செய்த குறும்பு' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். மேலும் மிர்ச்சி விஜய் தான் இரண்டு வருடமாக காதலித்து வந்த மோனிகா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மிர்ச்சி விஜய்க்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த தகவலை தனது சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் தனது மகனின் முகத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் விஜய். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.