தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நகுல். இவர் நடித்த காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன், சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகர் நகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தன் மனைவியுடன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு அதில் "எனது குடும்பத்தினர் வீட்டிலேயே சிறிய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நாங்களும் எங்கள் வீட்டு நாய்க்களும், பூனைகளும் மட்டும்" என்று வேடிக்கையாக இந்த நல்ல செய்தியினை பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
My in-laws did a small valagapu at home last week with just us and the puppies / kittens ! Oola was as usual not too shy to pose and Bubbles, we tried our best to have her in frame but she only photobombed us ! 😂
.
.
.
.#khulbeetails #khulbee #babykhulbee pic.twitter.com/A0ftxQBjGN
— Nakkhul (@Nakkhul_Jaidev) June 24, 2020