இரண்டு மாதங்களாக திரையுலக பிரபலங்களின் தொடர் மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் ஒருபுறம் இருக்க, அவர்களின் மனம் கவர்ந்த திரையுலக பிரபலங்களின் மரணம் பெருமளவில் பாதித்துள்ளது.
இந்நிலையில் மலையாள திரையுலகில் பிரபல கதாசிரியரும் இயக்குநருமான சச்சி மரணமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சச்சி, 'ரன் பேபி ரன்', 'ராமலீலா', 'டிரைவிங் லைசென்ஸ்' போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
மேலும், 'அனார்கலி', 'அய்யப்பனும் கோஷியும்' படங்களை இயக்கியுள்ளார். இதில் பிருத்திவிராஜ் -பிஜூ மேனன் இணைந்து நடித்திருந்த ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த படம் தமிழில் ரீமேக் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பிரபல நடிகர் சசிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சியின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ''இயக்குநர் சச்சியின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை ஐயப்பனும் கோஷயும் தமிழிற்காக அவரை மிஸ் செய்கிறோம். அவரது குடும்பத்திற்கும் மலையாள சினிமாவிற்கும் ஆழ்ந்த இரங்கல்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
Shocked to hear the sudden demise of #sachy sir, we miss him in #AyyappanumKoshiyum tamil, our condolences to his family and Malayalam cinema pic.twitter.com/RqoEIx9XVx
— M.Sasikumar (@SasikumarDir) June 19, 2020