பிரபல நடிகர் மரணம் அடைந்தார்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்... இவரை அடையாளம் தெரிகிறதா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபகாலமாகவே திரைத்துறை மற்றும் தொலைக்காட்சி சார்ந்த பல பிரபலங்கள் மரணமடைந்து வரும் வேளையில் அடுத்த சோக செய்தி மக்களை தாக்கியுள்ளது. புகழ்பெற்ற ஹிந்தி நடிகரான சாய் குந்தேவர் தற்பொழுது மரணம் அடைந்துள்ளார். இவர் புகழ்பெற்ற PK படத்தில் அமீர் கானுடன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம் இதுவரை முறியடிக்கப்படாத பல சாதனைகளை செய்தது. பல விருதுகளை அள்ளி  குவித்தது. மேலும் David (2013), Me Aur Main, Baazaar போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

பிரபல நடிகர் திடீரென மரணம் அடைந்தார் இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள் Popular actor Sai Gundewar dies due to brain cancer at the age

மூளை புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு முதல் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவருக்கு வயது 42. இவரது இறப்பு சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் நடிகரது திடீர் மறைவுக்கு தனது டிவிட்டர் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகர் திடீரென மரணம் அடைந்தார் இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள் Popular actor Sai Gundewar dies due to brain cancer at the age

People looking for online information on Actor, Corona, Covid19, Death, Sai Gundewar will find this news story useful.