நேற்றைய தினம் ரோபோ டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும்படி பிக்பாஸ் கூறினார். இதனால் அனிதா மற்றும் நிஷா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது இதுவரை இப்படி கத்திப் பேசி கடந்த வாரங்களில் நாம் கண்டதில்லை. இந்நிலையில் நிஷா மற்றும் ரியோ இருவரும் சேர்ந்து அனிதாவுக்கு எதிராக பேசினாலும், அனிதா தனி ஆளாக நின்று சமாளித்தார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் அர்ச்சனா மற்றும் நிஷா மூன்று பேருமே டிரெண்டிங்கில் இருந்தனர்.
இந்நிலையில் இதுபற்றி பிரபல நடிகரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சுஜா வருணியின் கணவருமான சிவகுமார் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "முதல் முறையாக இந்த சீசனில் அனிதா கூறியது முற்றிலும் உண்மை. ரியோ சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவரும் அவங்க அணியை சேர்ந்தவர் தான். அவர் ஆரியை பற்றி சொன்னதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் அவரும் அதே போக்கை தான் கைப்பற்றினார். இதற்கு பெயர் மனத்தாங்கல் இல்லை. குரூப்பிஸம்" என்று கூறியுள்ளார்.
In the 1st time of this whole season!!Anitha point was absolutely correct !!Rio point was not acceptable as he was also in the same team!I have no he also told aari!Rio tried the same gameplay!
This is not called baggage.its called GROUPISM #Anitha #BiggBossTami4 #BBTamilSeason4
— Shiva Kumarr (@Shivakumarr222) December 10, 2020