தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பாகுபலி நடிகர் ராணா. இவர் சமீபத்தில் ஆர்க்கிடெக்ட் மிஹீக்கா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி நடக்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஹைதரபாத் பகுதியில் உள்ள Taj Falaknuma அரண்மனையில் நடைபெற இருக்கிறது. அவரது திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 50 பேர் மட்டும் பங்குகொள்ளும் வகையில் நடக்கும் என்று கூறியுள்ளனர். இந்நினையில் திருமணத்துக்கு முன்பான சடங்கு நிகழ்ச்சிகள் இனிதே துவங்கி இருக்கின்றன. மேலும் மணமகள் மிஹீக்கா பஜாஜ் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை தற்போது வைரலாகி வருகிறது.