இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் சுவாரஸியமான சில விஷயங்கள் அடிக்கடி டிரெண்டாகி வருகிறது. நம் சமூகத்தில் சில பெயர்கள் பாப்புலராக இருக்கும் பட்சத்தில் அந்த பெயரில் பொருட்கள் சந்தைக்கு வருவது வழக்கம்.
அப்படி ஒரு அனுபவம் பிரபல டிவி நடிகருக்கு ஏற்பட்டுள்ளது. ஹிந்தி டிவி நடிகர் சுவரட் ஜோஷி மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அங்கே கொரோனா என்ற பெயரில் டீத்தூள் விற்பனை செய்யப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ''காமெடியா ? அல்லது வியாபாராமா ? யாராவது இதனை குடிப்பார்களா ?'' கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.