www.garudavega.com

பிரபல நடிகர் மரணம் அடைந்தார்... புற்றுநோயால் வந்த துயரம்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு, தற்போதுதான் சிறிய தளர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பல துக்க செய்திகளும், கலைஞர்களின் மரணங்களும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பல கலைஞர்கள் அடுத்தடுத்த மரணித்து வருவது ரசிகர்களை சோகத்தில்ஆழ்த்தியுள்ளது. அப்படி ஒரு சோகச் செய்தி தான் இது.

Popular actor dies due to lung cancer | பிரபல நடிகர் புற்றுநோயால் மரணம்

விக்கி டோனர் போன்ற படங்களில் நடித்த நாடகக் கலைஞரும், நடிகருமான பூபேஷ் குமார் பாண்டியா தற்போது நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்துள்ளார். நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்த சோக செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். எனவே அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும்படி அவருடைய நண்பர்கள் மற்றும் நடிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

Popular actor dies due to lung cancer | பிரபல நடிகர் புற்றுநோயால் மரணம்

People looking for online information on Actor, Bhupesh kumar pandya will find this news story useful.