தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தையும் மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உரிய நீதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் வணிகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரைப்பட பிரபலங்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், ''பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை... நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுகொள்ளும் என்பதே வரலாறு... இருவர் மரணத்தை மனித குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை...
நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுகொள்ளும் என்பதே வரலாறு...
இருவர் மரணத்தை மனித குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.. #JusticeforJayarajAndFenix
— G.V.Prakash Kumar (@gvprakash) June 26, 2020