உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவிலும் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. மக்கள் வீட்டில் இருக்கும் இந்த நிலையில் பயத்தில், திகில் அடைந்திருக்கின்றனர். அவர்களை இயல்பாக வைத்துக் கொள்வதில் பெரும் பங்காற்றுவது தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் தான்.
அப்படி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு அன்றாடம் பதிவுகளை இட்டு மகிழ்வித்தவர் தொகுப்பாளினி அஞ்சனா. அவரது பதிவுகள் ஒவ்வொன்றும் பல ஆயிரம் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளியது.
அவர் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார், அதில் "கொரோனா ஊரடங்கில் போட்டோ பகிர ஆரம்பித்து இன்று 25 ஆவது நாள். என்னுடைய நேரம், காலம் எல்லாவற்றையும் செலவழித்து 25 நாட்களும், வீட்டில் அத்தனை வேலைகளுக்கு இடையிலும் புகைப்படங்களை பதிவிட்டேன். எல்லாம் முடிந்து விட்டது. இனியும் நான் பதிவிட வேண்டும் என்றால் தேவை இல்லாத ஏதோ புகைப்படங்களை தான் பதிவிட வேண்டும். இத்தனை வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அனைவருக்கும் மிகவும் நன்றி. இது எனக்கு ஒரு அடிமைத்தனம் ஆகவே மாறி விடும் போலிருக்கிறது" என்று வேடிக்கையாகக் கூறி உள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தயவுசெய்து 'அப்படி மட்டும் சொல்ல வேண்டாம்' என்றும் 'உங்கள் முகத்தை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது' என்றும் உருகி கமெண்ட் செய்த வண்ணம் இருக்கின்றனர்.