பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் மரணம் அடைந்தார்... இளம் வயதில் குடும்பத்தை உலுக்கிய சோகம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை வாணிஸ்ரீ. அவர் நடித்த வசந்த மாளிகை, புண்ணிய பூமி, நல்லதொரு குடும்பம், ஊருக்கு உழைப்பவன் போன்ற படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் கடந்த ஆண்டு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் மரணம் அடைந்தார் Popualr actress vanisri son dies due to heart attack

இந்நிலையில் நடிகை வாணிஸ்ரீயின் குடும்பத்தில் நடந்த துக்க சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் நேற்றைய தினம் இரவு மாரடைப்பால் மரணம்  அடைந்தார். சென்னையில் பிரபல மருத்துவராகப் பணியாற்றி வந்த அவருக்கு வயது 36.

காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் படுக்கையை விட்டு எழும்பாததால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்பிய போது தான் மரணம் அடைந்த விஷயம் தெரியவந்துள்ளது. இந்த துக்க சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிலர் அவர் மனஅழுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரப்ப தொடங்கினர். இந்நிலையில் வாணிஸ்ரீ குடும்பத்தினர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் "தூக்கத்தில் ஏற்பட்ட மாரடைப்பு தான் அவரது மரணத்திற்கு காரணம். எனவே தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Vanisri, Son, Death

மற்ற செய்திகள்

பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் மரணம் அடைந்தார் Popualr actress vanisri son dies due to heart attack

People looking for online information on Death, Son, Vanisri will find this news story useful.