உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமாத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.
அப்படி ஹிந்தி சீரியல்களில் நடித்து வருபவர் நடிகர் ராஜேஷ் கரீர். இவர் மங்கள் பாண்டே, அக்னிபத் போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் "நான் இப்பொழுது கேட்பதற்கு அசிங்கப்பட்டால், எனது வாழ்க்கையே கடினமாகிவிடும். எனது நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. உதவி தேவைப்படுகிறது. உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்கிறேன் 300, 400 ரூபாயாவது உங்களால் முடிந்தால் அனுப்பிவிடுங்கள். எப்பொழுது ஷுட்டிங் ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை. அல்லது எனக்கு வேலை கிடைக்குமா என்று கூட தெரியவில்லை. வாழ்க்கை அப்படியே நின்று போய்விட்டது. என்னால் எதையும் புரிந்து கொள்ளவில்லை. வாழ உதவி செய்யுங்கள்.ப்ளீஸ் ப்ளீஸ் உதவி செய்யுங்கள்" என்று வேதனையுடன் கூறினார்.
இந்நிலையில் அவருடன் சீரியலில் பணியாற்றும் நடிகை சிவாங்கி இந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ந்து போயுள்ளார். உடனே அவரது கணக்கிற்கு ரூபாய் 10 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த நடிகர் இதனை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறும் பொழுது "நடிகை சிவாங்கி செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இருவரும் அத்தனை நெருக்கம் கிடையாது. ஆனாலும் எனது நிலைமையை பார்த்து அவர் உடனடியாக உதவி செய்துள்ளார்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு தொடர்ந்து பணம் அனுப்பி வருகின்றனர்.