உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான். சிலர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்தி வருகின்றனர்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகையான மயூரி கத்தாரி தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்துள்ளார்.பொதுவாகவே தனது பர்சனல் விஷயங்களை வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளும் நடிகை, தனது திருமண விஷயத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறுகையில் ஆம் எனக்கு திருமணம் முடிந்தது.(12.06.2020) பத்து வருட நட்பு இன்று திருமணத்தில் முடிந்துள்ளது" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவரது புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.