உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இது ஒரு புறம் என்றால் மறுபுறம் சமீப காலமாகவே பல துக்க நிகழ்வுகள் நடந்துவருகிறது. கலைஞர்கள் பலரும் அடுத்தடுத்து மரணித்து வரும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகரான பப்புகுட்டி பாகவதர் கடந்த திங்கள்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 107. வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தற்போது இயற்கை எய்தியுள்ளார். மலையாள சினிமாவில் 25 ஹிட் படங்களை கொடுத்தவர். மேலும் பாடகராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் மலையாள நடிகர் மோகன் ஜோஸ்ஸின் தந்தை ஆவார். மேலும் அவர்களின் இவரது மருமகன் கே.ஜி ஜார்ஜ் பிரபல இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதல்வர் பினராயி விஜயன் உட்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.