சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடர், மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான தொடராகும்.
பிரபல போட்டியாளரை திருமணம் செய்யும் நிரூப்? கொண்டாடும் ஹவுஸ்மேட்ஸ்.. என்ன நடக்குது?
இந்த தொடரில் நாயகியாக பூவரசி என்னும் கதாபாத்திரத்தில் ராதிகா ப்ரீத்தி நடித்து வருகிறார். மேலும், நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், திடீரென தொடரில் இருந்து விலகியிருந்தார்.
நாயகன் மாற்றம்
அதன் பிறகு, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியலான 'அருவி' என்ற தொடரின் கதாநாயகியாக ஜோவிதா நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல, பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த அருண் என்பவரும் பாதியில் விலகி, அவருக்கு பதிலாக அசிம் என்பவர், நாயகனாக உள்ளே வந்தார்.
ராதிகா ப்ரீத்தியின் இன்ஸ்டா பதிவு
இப்படி தொடர் மாறுதல்கள் நடந்து வந்த நிலையில், சீராக போய்க் கொண்டிருந்த தொடர், டிஆர்பி ரீதியாகவும் பெரிய ஹிட்டடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பூவே உனக்காக சீரியலின் நாயகி ராதிகா ப்ரீத்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் நன்றி
பூவே உனக்காக தொடரில் இருந்து விலகுவதாக ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது பற்றிய அவரின் பதிவில், "கனத்த இதயத்துடன் நான் பூவே உனக்காக தொடரில் இருந்து விலகியிருப்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இந்த அருமையான வாய்ப்பினை கொடுத்த சன் டிவிக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உருகிப் போன பூவரசி
தொடர்ந்து, எனக்கு பேராதரவு அளித்து வந்த ரசிகர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் இல்லை என்றால், நான் எதையும் சாதித்திருக்க முடியாது. எனது வாழ்வின் அடுத்தடுத்த பயணத்தில், நீங்கள் என்னுடன் இருப்பீர்கள் என எனக்கு தெரியும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள். உங்களின், பூவரசி" என உருக்கத்துடன் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, பூவே உனக்காக தொடரின் ஆரம்பத்தில் இருந்த நடிகர்கள் சிலர் மாறியிருந்த நிலையில், தற்போது தொடரின் நாயகியான 'பூவரசி' கதாபாத்திரம் புகழ் ராதிகா ப்ரீத்தி விளங்கியுள்ளது பற்றி, இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"என் புருஷன் பண்ணது தப்பு.." கண்ணில் நீர் வழிய நிற்கும் குஷ்பு.. வெளியான புதிய சீரியல் 'ப்ரோமோ'