பொன்னியின் செல்வன் படத்தின் அமெரிக்க வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
இயக்குனர் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படம், IMAX 3டி வடிவத்திலும் ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஆரவாரத்தோடு தமிழகம் முழுவதும் பெரு நகரங்களில் முதல் காட்சி அதிகாலை 4 மணி முதல் திரையிடப்பட்டது. அதன் பின்னர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியதை அடுத்து அடுத்தடுத்த நாட்களில் அதிகாலை 2 மணிக்கு கூட சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.
ஞாயிறு அன்றும் அதிகாலை 2 மணிக்கும் 5 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
முதல் நாளில் பொன்னியின் செல்வன் படம் 80 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமைந்தது. 3 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்தது. தற்போது வரை 300+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.
இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம், அமெரிக்காவில் மட்டும் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமெரிக்காவில் அமைந்துள்ளது. இந்த படம் 2.0 படத்தின் வசூலை முறியடித்து முதலிடம் பிடித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் இந்த படம் 41.42 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
The History which has to be known by everyone is getting Bigger & Bigger 🤩❤#PonniyanSelvan enters the $5 Million dollar club and all set to cross 2.O by this weekend to become USA’s all time no.1 grosser 💥💥🤙🏾🤙🏾
🇺🇸 release by @sarigamacinemas pic.twitter.com/jPFwC7kEIK
— Sarigama Cinemas (@sarigamacinemas) October 8, 2022