Naane Varuven M Logo Top
www.garudavega.com

19 வகை உணவுகளுடன் விருந்து.. அசந்து போன பூஜா ஹெக்டே! அம்மா ஸ்பெஷல்னா சும்மாவா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே தனது வீட்டில் நவராத்திரி விருந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Pooja Hegde Vijaya Dashami Celebration with 19 Different Foods

Also Read | பிரபல நடிகர் அருண் பாலி மறைவு.. தான் நடித்த கடைசி படம் ரிலீசான அதே நாளில் நடந்தேறிய சோகம்.

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை வணிக ரீதியாக இவரது  வெற்றிப் படங்களில் அடங்கும். 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்தார்.

Pooja Hegde Vijaya Dashami Celebration with 19 Different Foods

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்" ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 20 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

Pooja Hegde Vijaya Dashami Celebration with 19 Different Foods

சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் குடும்பத்துடன் ஒரு மாதம் சுற்றுலா சென்றார் பூஜா ஹெக்டே. சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் சல்மான் கான் நடிக்கும் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்"  படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Pooja Hegde Vijaya Dashami Celebration with 19 Different Foods

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது மும்பை வீட்டில் இருந்து நடிகை பூஜா ஹெக்டே  போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தனது அம்மாவின் கைப்பக்குவத்தில் சமைக்கப்பட்ட விருந்து சாப்பாட்டை சாப்பிட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 19 வகை உணவுகளுடன் காய்கறி கூட்டு, பொரியல், அவியல், வறுவல், பிரட்டல் என உணவு பதார்த்தங்கள் அமைந்துள்ளன.

Also Read | பெண் குழந்தை பிறந்து.. ஒரு வாரம் கழித்து KPY நவீன் பகிர்ந்த உருக்கமான பதிவு!!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde Vijaya Dashami Celebration with 19 Different Foods

People looking for online information on Pooja Hegde, Pooja Hegde Vijaya Dashami Celebration, Vijaya Dashami Celebration will find this news story useful.