நடிகை பூஜா ஹெக்டே அமெரிக்காவில் எடுத்த தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 20 மில்லியன் ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் குடும்பத்துடன் ஒரு மாதம் சுற்றுலா சென்றுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். முதல் கட்டமாக தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றார்.
பேங்காக் கடற்கரையில் இருந்து பிகினி புகைப்படங்களை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகின.
அதன் பின்னர் நடிகை பூஜா ஹெக்டே இங்கிலாந்து நாட்டின் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார். இங்கிலாந்தில் எடுத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அடுத்த நாடாக அமெரிக்கா செல்வதாக சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். அதன் படி தற்போது அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகரத்திற்கு சென்று அங்கிருந்து புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நியுயார்க் சாலையோர பகுதியில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை வணிக ரீதியாக இவரது வெற்றிப் படங்களில் அடங்கும். 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கபி எய்த் கபி திவாளி" ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.