75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நேற்று (17.05.2022) தொடங்கி உள்ளது.
Also Read | ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியன்.. வேறமாரி வைரலாகும் LATEST போட்டோ ஷூட் வீடியோ
75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவின் தலைவராக பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் லிண்டன் இருப்பார். ஜூரியில் தீபிகாவுடன் இணைந்து நடிகர்-இயக்குனர் ரெபேக்கா ஹால், நூமி ராபேஸ் மற்றும் இத்தாலிய நடிகர்-இயக்குனர் ஜாஸ்மின் டிரின்கா மற்றும் இயக்குநர்கள் அஸ்கர் ஃபர்ஹாடி, லாட்ஜ் லை, ஜெஃப் நிக்கோல்ஸ் மற்றும் ஜோச்சிம் ட்ரையர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களை மே 28 ஆம் தேதி கேன்ஸில் நடைபெறும் விழாவில் நடுவர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
இந்த விழாவில், இந்திய திரைப்படங்கள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள், திரையிடப்படவுள்ளது. அதே போல, பல நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தியாவின் சார்பில், பா.ரஞ்சித், தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் மாதவன், பார்த்திபன், கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கியுள்ள 'லி மஸ்க்' திரைப்படம், மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் படம், நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள, நான் லீனியர் திரைக்கதையில், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படமான இரவின் நிழல் & கமல் நடித்த 'விக்ரம்' படத்தின் டிரெய்லர் ஆகியவை, கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
செவ்வாயன்று, கேன்ஸ் நடுவர் மன்ற உறுப்பினர் நடிகை தீபிகா படுகோன் சிவப்பு கம்பளத்தில் நடந்தார். இம்மதிப்புமிக்க நிகழ்வில் நடிகைகள் தமன்னா பாட்டியா, ஊர்வசி ரவுடேலா. நடிகை பூஜா ஹெக்டே, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் சென்ற ஐஸ்வர்யா ராய் பச்சனும் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளார்.
கேன்ஸ் பட விழாவுக்கான செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையிலான இந்தியக் குழுவில் நடிகை தமன்னாவும் இடம்பெற்றுள்ளார். இப்பிரதிநிதிகள் குழுவில் ஏஆர் ரஹ்மான், பூஜா ஹெக்டே, நவாசுதீன் சித்திக், ஆர். மாதவன் மற்றும் சேகர் கபூர் உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்நிலையில் முதல் நாள் விழா முடிந்த பிறகு அனைத்து பிரதிநிதிகளும் இணைந்து இரவு உணவு உண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் தமன்னா பதிவேற்றி உள்ளார். மெழுகுவர்த்தி ஏற்றி இரவு உணவை பிரதிநிதிகள் உண்டனர்.
கேன்ஸ் ஃபிலிம் மார்க்கெட்டிங் இந்திய பெவிலியன் பிரிவில் ஆறு படங்கள் இடம்பெற்றுள்ளன, ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் (இந்தி, ஆங்கிலம், தமிழ்), கோதாவரி (மராத்தி), ஆல்பா பீட்டா காமா (இந்தி), பூம்பா ரைடு (மிஷிங்), துயின் (மைதிலி) ) மற்றும் நிரயே ததகலுல்லா மரம் (மலையாளம்) ஆகிய 6 படங்கள் திரையிடப்படுகின்றன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8