லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது.
Also Read | மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்.. வெளியான த்ரிஷாவின் கேரக்டர் லுக் போஸ்டர்!
முன்னதாக RAPO19 என அழைக்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு சமீபத்தில் அசத்தலான ஸ்டைலில் 'தி வாரியர்' என வெளியிடப்பட்டது.
ராம் பொதினேனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் அக்ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் டிரெய்லர் ஜூலை 1 ஆம் தேதி வெளியாகி உள்ளது. “தி வாரியர்” திரைப்படம், வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.
ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த அதிரடி திரைப்படத்தை பவன் குமார் வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுஜித் வாசுதேவ் செய்கிறார். இந்தப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பவன் குமாரின் ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், “லிங்குசாமி, எல்லா இயக்குனர்களுக்கும், குறிப்பாக லாக்டவுன் நேரத்தில் அவர் மட்டுமே இணைக்கும் புள்ளியாக இருந்தார். இங்குள்ள அனைத்து வாரியர்களையும் ஒரே மேடையில் பார்த்ததில் நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். இங்கு இவ்வளவு போர்வீரர்கள் (வாரியர்) இருக்கிறார்கள் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தால், ஐதராபாத்தில் படமாக்குவதற்குப் பதிலாக பொன்னியின் செல்வன் போர்க் காட்சிகளை இங்கே படமாக்குவேன். நான் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு ஹைதராபாத்தில் இருந்த அதே இடத்தில் வாரியர் படத்தின் படப்பிடிப்பில் லிங்குசாமி இருந்தார், அவர் இப்போது படத்தை முடித்துவிட்டு ரிலீஸுக்குத் தயாராகி வருகிறார், நாங்கள் (பொன்னியின் செல்வன்) இன்னும் பின் தொடர்ந்து செல்கிறோம்" என கூறினார்.
Also Read | குழந்தைகளுடன் பிரிட்டனில் வலம் வரும் நடிகர் அஜித்.. இணையத்தை கலக்கும் சூப்பர் போட்டோ!