பொன்னியின் செல்வன் படத்தின் மலையாள ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் கைப்பற்றி உள்ளார்.
Also Read | ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்.. படக்குழுவில் இணைந்த "அகண்டா" பட பிரபலம்..! வைரல் ஃபோட்டோ
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன. பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் மலையங வினியோக உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் ஶ்ரீ கோகுலம் கோபாலன் தனது ஶ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். இதனை பொன்னியின் செல்வன் படத்தின் படத்தயாரிப்பு நிறுவனம் லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஶ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் சென்னையில் கோகுலம் ஸ்டூடியோசை நடத்தி வருவதுடன் பல மலையாள படங்களை தயாரித்தும் உள்ளது.
Also Read | சிரஞ்சீவி- கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்.. வெளியான சூப்பர் ரிலீஸ் தேதி!