கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்தது.
Also Read | "கலைஞர்கள் மது குடிப்பதில் கண்ட்ரோலாக இருக்க வேண்டும்" - கோவை குணா மரணம்.. ஆதவன் வேதனை..
இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர். பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
இப்படத்தின் முதல் பாகம் அதிக வசூலையும் பாராட்டையும் பெற்ற நிலையில், வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ஆம் பாகத்தில் இடம்பெறும் அகநக பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இதில், பாடலாசிரியர் வைரமுத்துதான் வழக்கமாக மணிரத்தினத்திற்கு பாடல் எழுதுவார் எனும் பொழுது வைரமுத்துவுக்கு மாற்றாக இளங்கோ கிருஷ்ணன் இந்த படத்தில் பாடல் எழுதி இருக்கிறாரா என்பது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த இளங்கோ கிருஷ்ணன், “யாரும் யாருக்கும் மாற்றாக இருந்து விட முடியாது. யாரும் யாருக்கும் மாற்றாக படைக்கப்படவில்லை. எல்லா மனிதர்களும் அவரவர் அளவில் பணி செய்கின்றனர்.
அவர் (வைரமுத்து), அவர் வேலையை செய்தது போல் நான் என் வேலையை செய்கிறேன். காலம் மாறுகிறது, ரசனை மாறுகிறது, தெரிவுகள் மாறுகிறது, மக்களுடைய மனநிலை மாறுகிறது, அப்படி இருக்கும்போது அதற்கு ஏற்றார் போல் ஆட்கள் வரத்தான் செய்வார்கள். அது அதனுடைய இயல்பு தான். ஒரு 50 வருடங்களுக்கு முன்பு இருந்த பாடல்கள், இன்று எழுதப்படுகிற பாடல், இன்று நுகரப்படுகிற பாடல். எனவே இந்த பாடலுக்கான ஒரு புதிய முகத்தை, புதிய அடையாளத்தை கொடுக்க வேண்டிய தேவை இருக்கும் பொழுது அதற்கான ஆட்களை தேடி வருவார்கள். இது இயல்புதான்.” என பேசியுள்ளார்.
Also Read | வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதியின் ‘விடுதலை’ .. பார்ட் 2 குறித்த செம அப்டேட்..