நடிகர் கார்த்தியின் 24 வது படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read | குழந்தையுடன் யுவராஜ் சிங்... அடடே.. முதல்முறையாக வெளிவந்த செம சூப்பர் வைரல் போட்டோஸ்!
கார்த்தி நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் 'சுல்தான்'. இந்த படத்துக்குப் பிறகு இப்போது கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன. இவை அடுத்தடுத்து இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்டன. இதன் பின் தயாரிப்பு பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் தான் பொன்னியின் செல்வன், விருமன் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்டார். பின்னர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. மைசூரில் நடன காட்சியுடன் ராஸி கண்ணா - கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். வரும் மே 25 ஆம் தேதி கார்த்தியின் பிறந்தநாள் வருவதை அடுத்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கார்த்தி- இயக்குனர் ராஜூமுருகனுடன் தனது 24வது படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு கார்த்தி நடிக்க ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இன்று ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் 48வது பிறந்த நாளாகும். வேட்டையாடு விளையாடு, பர்ஃபி, தமாஷா, சஞ்சு, காற்று வெளியிடை ஆகிய படங்கள் இவரின் முக்கியமான படங்களாகும். அந்நியன் படத்தில் ஒளிப்பதிவாளர் வேலாயுதம் மணிகண்டனுடனும், ஆட்டோகிராப் படத்தில் விஜய் மில்டனுடனும் இணைந்து பணியாற்றியவர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8