www.garudavega.com

RAMBHA CAR ACCIDENT: "கெட்ட நேரம்.. பிரார்த்தனை பண்ணுங்க".. விபத்துக்குள்ளான நடிகை ரம்பா சென்ற கார்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 90களில் இருந்து பிரபலமானவர் நடிகை ரம்பா.

pls pray for us actress Rambha car accident post

தனக்கே உரிய கியூட் நடிப்பிற்காக இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பின்னர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிக அண்மையில்தான் இவரது பதிவில், தவறான புரிதலுடன் ஜோக் அடித்த ரசிகர் ஒருவரிடம் தமது சமூக வலைதளத்தில் நடிகை ரம்பா, நெகட்டிவாக பேசாதீர்கள். ஜோக்கிற்காக கூட இப்படி செய்ய வேண்டாம். வார்த்தைகளை பாசிடிவாக மாற்றினால், வாழ்க்கையும் பாசிடிவாக மாறும் என அன்பாக அட்வைஸ் பண்ணியிருந்தார்.

இந்நிலையில்தான் நடிகை ரம்பா தம் குழந்தைகளுடனும், செவிலித்தாயுடனும் காரில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென எதிர்பாராத விபத்து நடந்ததாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்களும் திரையுலகினரும் பதறியுள்ளனர். எனினும் அனைவரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், எல்லாம் கெட்ட நாட்கள், கெட்ட நேரம் என்றும் ரம்பா அப்பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன் அவருடைய மகள் குறித்தும் ரம்பா பதிவிட்டுள்ளார்.

அதன்படி குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு திரும்பிவரும் வேளையில் நடிகை ரம்பாவின் காரை, இன்னொரு கார் மோதியதாகவும், இதில் குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், தமது ஒரு மகள் மட்டும் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவருக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார். ரம்பாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் வார்த்தைகளையும், ‘எல்லாம் நல்லபடிடாகிவிடும்’ என நம்பிக்கை வார்த்தைகளையும் கூறி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

Pls pray for us actress Rambha car accident post

People looking for online information on Rambha car accident, Rambha Indran will find this news story useful.