வைரல் ஆகி வரும் தகவல் என்னவெனில் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது என்றும், நெட்பிலிக்ஸ் நிறுவனம் அதன் உரிமையை பெற்றிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதில் உண்மை எதுவும் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மாஸ்டர் படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீசாகும் என்றும், அதற்குப் பிறகு தான் அமேசான் பிரைமில் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் Distributor சிங்காரவேலன் இதுபற்றி தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று செய்திகள் வெளியிடுகின்றனர். ஆனால் படக்குழுவினருக்கு நான் ஒரு தாழ்மையான விண்ணப்பம் வைக்கிறேன். தயவுசெய்து எப்படியாவது மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். தியேட்டர் உரிமையாளர்களுக்கும், நமக்கும் இருக்கிற சிறிய பிரச்சினைகள் அண்ணன் தம்பிக்குள் இருக்கும் பிரச்சினை போன்றவை. எளிதில் சரியாகி விடும், ஆனால் நம்மை நம்பி தொழில் செய்து வரும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இந்த சமயத்தை விட்டால் ஒரு வருடம் பின்னோக்கி சென்றது போல் ஆகிவிடும்" என்று கூறியுள்ளார்.
"எனவே ரசிகர்களுடன் நானும் சேர்ந்து மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்க்க தான் விரும்புகிறேன், தயவுசெய்து இதை கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுங்கள். மாஸ்டர் படம் என்று தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதோ அன்றுதான் ஒரு பெரிய எழுச்சி கிடைக்கும். மக்கள் தியேட்டரில் சென்று படம் பார்க்க இருக்கும் பயம் நீங்கும். விஜய் போன்ற சூப்பர் ஸ்டாரின் படங்கள் தான் அதற்கு ஒரே வழி. தியேட்டர்கள் இயங்கி எட்டு மாதம் ஆகிவிட்டது. மிகப்பெரிய வருவாய் இழப்பை குறைக்க மாஸ்டர் மிகப் பெரிய உதவியாக இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.