பிரபல தமிழ் சினிமா இளம் இயக்குனர் மணி நாகராஜ் மரணம் அடைந்துள்ளார்.
Also Read | பிரபல டிவி சேனலில் தமிழில் ஒளிபரப்பாகும் KGF Chapter 2.. எப்போ? எதுல?
இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் பணிபுரிந்தவர் இயக்குனர் மணி நாகராஜ்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரை கதாநாயகனாக பென்சில் படத்தில் அறிமுகப்படுத்தியவர் மணி நாகராஜ் தான். இவர் இயக்கிய பென்சில் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு ரிலீசானது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் ஶ்ரீ திவ்யா நடித்திருந்தார்.
பென்சில் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி நாகராஜ் "வாசுவின் கர்ப்பிணிகள்" என்ற படத்தை இயக்கி உள்ளார். ஸச்சாரியாயுடே கர்ப்பிணிகள் படத்தின் தமிழ் ரீமேக்காக வாசுவின் கர்ப்பிணிகள் படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் "நீயா நானா" கோபிநாத், அனிகா சுரேந்தர், சீதா, வனிதா விஜயகுமார், லேனா குமார், அபிஷேக் சச்சின் மற்றும் சுஜா வருணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இச்சூழலில் இயக்குனர் மணி நாகராஜ் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
மணி நாகராஜ் மரணம் குறித்து எடிட்டர் சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் உருவாக்கமான பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "மணி நாகராஜ் இறப்பு செய்தி கேட்டு மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். எனக்கு பின் தயாரிப்பு பணிகளின் அடிப்படையை கற்றுக் கொடுத்தவர். மிக நல்ல நண்பர் & ஆசிரியர். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும், மணி ஜி. உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது" என பதிவிட்டுள்ளார்.
Shocked & saddened to know about the passing away of film-director Mani Nagaraj, former associate of Gautham Vasudev Menon. He's the one who taught me the basics of post-production. A good friend & a great teacher gone too soon. Rest in Peace, Mani Ji. You will be missed. 💔🕯️🌹
— T.S.Suresh (@editorsuresh) August 25, 2022
Also Read | Spain தீவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. அந்த 5 Star Hotel ஒரு நாள் வாடகை மட்டும் இவ்வளவு ரூபாயா?