பயணிகள் கவனிக்கவும் என்ற தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் பாலகுமாரனின் குடும்பத்தினர்.
Also Read | ”நான் ஹோம்லியா நடிச்சா யாருப்பா பாப்பா?”… "வீட்டுக்குள்ள விடல"… நடிகை ஷர்மிலி open talk!
பயணிகள் கவனிக்கவும்…
இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. இந்த திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் பதிப்பான 'பயணிகள் கவனிக்கவும்' படத்தை கொரில்லா மற்றும் பார்டர் ஆகிய படங்களை தயாரித்திருக்கும் ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.
படத்தலைப்புக்கு வந்த சிக்கல்…
இந்நிலையில் ’பயணிகள் கவனிக்கவும் என்ற தலைப்பு எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலின் தலைப்பு என்பதாலும், இதுகுறித்து தங்களிடம் படக்குழுவினர் எந்த அனுமதியும் பெறவில்லை என்றும் பாலகுமாரனின் மகன் உதவி இயக்குனருமான சூர்யா பாலகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தார். அவரது பதிவில் “எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய பயணிகள் கவனிக்கவும் மிகவும் பிரபலாமான ஒரு படைப்பு, 1993 ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து அன்று முதல் இன்று வரை பத்து பதிப்புகளுக்கு மேல் வந்த ஒரு சக்ஸஸ்ஃபுல் புத்தகம். இதை நானும் எனது நண்பர்களும் சீன் வாரியாக பிரித்து, வரி வரியாக வசனங்களக மார்க் செய்து, கதாபாத்திரங்களாக பிரித்து அவர்களுக்கு வடிவம் கொடுத்து வைத்துள்ளோம். என்றோ ஒரு நாள் உயிர் வரும் என்ற கணவுடன். பாலாவின் “ பயணிகள் கவனிக்கவும்” என்னுடன் சேர்ந்து என் கனவுகளுடன் சேர்ந்து நிச்சயமாக வளரும், ஒரு நாள் வெளிவரும். ஆனால் அந்த கனவுப்படைப்புக்கு, அந்த திரைப்படத்திற்கு இப்பொழுது என்ன பெயர் வைப்பது? யார் கேட்பினும் பதில் கிட்டுமா?
கீழே இருக்கும் படத்திற்கும் என் அப்பா பாலகுமாரன் எழுதிய புத்தகத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இருக்காது என்று நம்புகிறேன். மலையாள படத்தின் ரீமேக் என்று தெரியவந்தது. இருப்பினும் இந்த டைட்டிலை உங்களின் படத்திற்கு வைப்பதற்கு என்ன காரணம்? விளக்கம் கிடைக்குமா? பெரிய நடிகர் பேசுவாரா? . யார் பேசினாலும் சட்ட ரீதியாக அணுகலாம் என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.” எனத் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சிக்கலுக்கு முடிவு…
இந்நிலையில் இப்போது பிரச்சனையை இரு தரப்பும் பேசி முடித்துக்கொண்டுள்ளனர். இது சம்மந்தமாக சூர்யா பாலகுமாரன் சார்பாக வெளியான அறிவிப்பில் “வணக்கத்திற்குரிய ஊடக நண்பர்களுக்கு, இன்று காலை இயக்குனர் திரு. SP சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் திரு. விஜய் ராகவேந்திரா அவர்கள் எங்கள் வீடு தேடி வந்து என்னிடமும் என் தாயார்களிடமும் தாங்கள் அறியாமல் இதை செய்து விட்டதாகக் கூறி தன்நிலைவிளக்கம் தெரிவித்தார்கள். தாயாரிடம் மண்ணிப்பும் கேட்டார்கள். இதை அடுத்து சுமூகமாக பேசி முடித்துக்கொண்டோம்.” எனக் கூறப்பட்டுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8