உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் "ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் இருந்து, தமிழக கடல்பகுதியில் மீன் பிடிக்க வந்த 99 மீனவர்கள் சென்னை துறைமுகத்தில் சிக்கி இருக்கின்றனர். அவர்கள் சரியான உணவு, தங்குமிடம் இன்றி தவிக்கின்றனர். தயவு செய்து அவர்களுக்கு உணவு, தங்குமிடம் அளித்து ஊர் திரும்ப வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி அந்த மீனவர்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்கள் கிடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்கள் ஊர் திரும்பவும் வழி செய்துள்ளார். இந்தச் செய்தியால் நெகிழ்ந்து போன பவன் கல்யாண் அவருக்கு நெகிழ்ச்சியோடு நன்றி கூறியுள்ளார்.
My wholehearted thanks 🙏 to
“மாண்புமிகு தமிழக முதல்வர்,
திரு. Eddappadi K Palaniswami அவர்கள்” for his swift response on stranded AP fishermen.@CMOTamilNadu @chennaicorp pic.twitter.com/gCLIe1bV92
— Pawan Kalyan (@PawanKalyan) March 30, 2020