மலையாளத்தில் ஹிட் ஆன் ‘ஐயப்பனும் கோஷியும்’படம், தெலுங்கில் ‘பீம்லா நாயக்’ பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், பிருத்விராஜ் கேரக்டரில் ராணா நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று வெளியாகியது.
முன்னதாக ஆந்திர அரசு சினிமா கட்டணங்களை நிர்ணயித்தது. முனிசிபல் கார்ப்பரேஷன் நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ்களில் டிக்கெட் விலை ரூ.75, ரூ.150 மற்றும் ரூ.250 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்டிபிளெக்ஸ்களில் தற்போதுள்ள விலைகளைப் போலவே விலைகள் சற்று அதிகமாகவோ அல்லது கிட்டத்தட்ட ஒத்ததாகவோ இருக்கும். ஆனால், மாநகராட்சி நகரங்களில் உள்ள ஏசி சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் ரூ.40, ரூ.60, ரூ.100 என்ற அளவில்தான் விலை உள்ளது. முன்னதாக, இந்த திரையரங்குகளில் அதிகபட்ச விலை ரூ.150 ஆக இருந்தது.
ஏசி இல்லாத சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் விலை ரூ.20, ரூ.40 மற்றும் ரூ.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில், மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட்டுகளின் விலை ரூ.60, ரூ.100, ரூ.150 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏசி சிங்கிள் தியேட்டர்களில் டிக்கெட் விலை ரூ.30, ரூ.50, ரூ.70 , ரூ.15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. , ஏசி இல்லாத திரையரங்குகளில் ரூ.30 மற்றும் ரூ.50.
கிராமங்கள் மற்றும் கிராமப்புறங்களில், மல்டிபிளக்ஸ்களில் ரூ.30, ரூ.50 மற்றும் ரூ.80 ஆகவும், ஏசி சிங்கிள் தியேட்டர்களில் ரூ.10, ரூ.15 மற்றும் ரூ.20 ஆகவும், கிராமங்களில் ஏசி இல்லாத தியேட்டர்களில் ரூ 15, ரூ.5, ரூ.10 ஆகவும் கட்டணம் உள்ளது.
இது டோலிவுட் சினிமா தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிக்கெட் கட்டணத்தை மறுசீரமைக்கும் படி, திரையுலகினர் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இச்சூழலில் தான் ‘பீம்லா நாயக்’ திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது.
இதன் வெளியீட்டை முன்னிட்டு, காலங்காலமாக தெலுங்கு சினிமாவில் தொடரும் சிறப்புக் காட்சிகள், ரசிகர்கள் காட்சிகளுக்கும் அரசு திடீர் தடை விதித்தது. அத்துடன் நிர்ணயித்துள்ள டிக்கெட் கட்டணத்துக்கு அதிகமாக கூடுதல் தொகை வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்களை அரசு எச்சரிக்கை விடுத்து. உத்தரவுகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க அதிகாரிகளையும் அரசு நியமித்தது.
இதனால், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படலாம் என்று நினைத்த பவன் கல்யாண் ரசிகர்கள், அதைச் சரிகட்ட தியேட்டர்கள் முன் உண்டியல் வைத்து நிதி திரட்டி வருகின்றனர்.