www.garudavega.com

AMIR PAVNI : அமீரை REJECT பண்ண GIRLS-க்கு நன்றி.. க்யூட்டா சொன்ன பாவனி.. ரொமான்ஸ் ததும்பும் பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி சின்னத்திரையில் நாயகியாக வலம் வந்த பாவனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார். அதன்படி, கணவரை இழந்த பாவனி தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை வாழ்ந்து கொண்டிருப்பதாக பகிர்ந்து இருந்தார்.  இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக விஜய் டிவி கோரியோகிராபராக இருந்த அமீர் உள்ளே வந்தார்.

Pavni thanks to girls who rejected amir exclusive interview

வந்தவர் பாவனிடம் விளையாட்டாக ஆரம்பத்தில் பேசினாலும், பின்பு சீரியஸாக தன்னுடைய காதலை பாவனிக்கு சொல்ல தொடங்கினார். ஒரு வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை மையமாக வைத்து BB Jodigal நிகழ்ச்சி நடந்து வந்து கொண்டிருந்தது. அதன்படி BB Jodigal நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டான்சராக பங்குபெற்ற அமீர் மற்றும் பாவனி இருவரும் டான்ஸ் பார்ட்னராக இணைந்து ஆடி வந்தனர். இந்த BB Jodigal  நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இருவரும் தற்போது வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கின்றனர்.

முன்னதாக அமீர் குறித்து பாவனி போட்ட பதிவு ஒன்றில், “நீங்கள் மிகச் சிறந்த மனிதர். மாஸ்டர். டான்ஸ் ஆடும் போது மிகவும் உறுதுணையானவர். நல்ல நண்பர் . எனவே நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து தொடங்கலாம். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த இணையராக இருங்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். நீங்கள் எனக்காக எப்போதும் இருப்பீர்களா.? எப்போதும் ஐ லவ் யூ” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமீர் மற்றும் பாவனி இருவரும் பிஹைண்ட்வுட்ஸ் ரசிகர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதில் பேசிய பாவனி,  “பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் கூட நான் ஒரு முடிவுக்கு வரவில்லை. இவர் ஏதோ விளையாட்டாக சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றுதான் நினைத்தேன். நான் விலகி சென்றேன். அதன்பிறகு இவர் டிஆர்பி-காக பண்ணவில்லை, நிஜமாவேதான் சொல்கிறேன்.. உனக்கு எப்போது என் மீது அபிப்ராயம் தோன்றுகிறதோ அதுவரை நான் காத்திருக்கிறேன். நான் சிங்கிளாகவே இருக்க நினைத்தேன், அமெரிக்கா சென்று சிங்கிளாக இருந்துவிடலாம் என சுற்றிக்க்கொண்டிருந்தேன்.

ஆனால், டான்ஸ் ஆட தெரியாத என்னை வைத்து ஆடி டைட்டில் வெல்லும் வரையில் சென்றிருக்கிறார். ஒரு மாஸ்டராக அவர் என்னை மிகவும் சுயமரியாதையுடன் நடத்தியிருக்கிறார். மேடம் என்றுதான் சொல்லி ஒவ்வொன்றையும் பேசியிருக்கிறார். நான் கூட அவரை ஒரு சில நேரங்களில் வாடா போடா என்று பேசி இருக்கிறேன். அவர் என்னை டி போட்டு பேசியதே இல்லை அவர் இதற்கு முன்பாக அவரை காதலை ஏற்காத பெண்களுக்கு நான் நன்றி தான் சொல்ல விரும்புகிறேன் அதனால்தான் இப்படி ஒருவர் எனக்கு கிடைத்து இருக்கிறார்” என்று கூறினார்.

AMIR PAVNI : அமீரை REJECT பண்ண GIRLS-க்கு நன்றி.. க்யூட்டா சொன்ன பாவனி.. ரொமான்ஸ் ததும்பும் பேட்டி வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pavni thanks to girls who rejected amir exclusive interview

People looking for online information on Amir, Amir pavani, Pavani, Pavani amir will find this news story useful.