பிக்பாஸில் பாவனி ரெட்டிட் தன் முழு கதையை கதை சொல்லும் டாஸ்கில் கூறியிருக்கிறார்.
அதில், “நான் நிறைய வேலைகளை செய்தேன். ஆனால் எதிலும் பிடிப்பில்லை. பின்னர் ஒரு விளம்பரத்தை பார்த்து ஆடிஷனுக்கு பாஸ்போர்ட் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு சென்றேன். ஆனால் ஸ்டூடியோவுக்கு சென்று ஃபோட்டோஷூட் எடுக்க போனால், தொழில்முறையாக நடிக்க கற்றுக்கொள்ளச் சொன்னார்கள். அதையும் செய்தேன். திரைப்படங்களுக்கு முயற்சித்தேன்.
அப்போது ஒரு டான்சருடன் காதல் மலர்ந்தது. வீட்டில் சொன்னேன். ஆனால் ஒத்துக்கல. வீட்டை விட்டு என் காதலர் பிரதீப்பிற்காக வெளியேறி , இருவரும் திரைப்படங்களுக்காக முயற்சித்தால் வேலைக்கு ஆகாது என முடிவு செய்து சீரியலில் நடிக்கத் தொடங்கினோம். ஒரே சீரியலில் நடித்தோம். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தோம். 5 மாதம் ஆனது. வாழ்க்கை நன்றாக சென்றது. கர்ப்பம் தரித்தேன். டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். நடிக்க வேண்டாம் என வீட்டில் சொன்னார்கள்.
சரி என்றிருந்தபோது ஒருநாள் 15 வருடமாக அண்ணா மாதிரி பழகிய ஒருவரின் பிறந்த நாளில் இருந்தேன். அன்று கணவர் போன் பண்ணினார். அன்று மது, சிகரெட் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பின்னர் அவரிடம் அதுபற்றி கேட்க, அவருக்கு கோபம் வந்து நடவடிக்கை மாறியது. அவர் இன்னும் அதிகம் குடித்து சண்டை வந்துவிடக் கூடாது என வெளியேறினேன். அவருக்கு ஷூட்டிங் இருக்கிறது என்று டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு தூங்கினேன். அண்ணா இன்னொரு பெட் ரூமில் உறங்கினார்.
இரவு 2 மணிக்கு போன் பண்ணினேன். அவர் போனை எடுக்கல. கதவைத் திறக்கவில்லை. கதவு இடுக்கு வழியே பார்த்தேன். பயந்துபோய் அண்ணாவை அழைத்துவந்து கதவை திறந்து பார்த்தால், அவர் புடவையில் மின் விசிறியில் தூக்கிட்டு இறந்துவிட்டார். ஆனால் தூக்கு கட்டப்படவில்லை. அவருக்கே அவர் இறந்தது தெரியாது என நினைக்கிறேன்.
மேலும் பேசியவர், “நான் அண்ணன் மாதிரி பழகிய ஒருவருடன் எனக்கு தவறான உறவு இருந்ததாகவும், கணவர் அதனால் தான் என் கணவரை திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாகவும் பழி போட்டார்கள். போலீஸ் என்னை சமாதானப்படுத்தி எதுவும் பேச வேண்டாம் என சொன்னதுடன் என் மேல் எந்த தவறும் இல்லை என சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
ஆனால் எனது கணவர் இறந்த பின்பு என் மாமியார் என்னை அழைத்து உன்னால் தனியாக அவன் இல்லாமல், தூங்க முடியாதுல்ல..? என கேட்டு தன்னுடன் படுக்க வைத்து பார்த்துக் கொண்டார். என் கணவர் அவ்வளவு அன்புடன் இருந்தும், விட்டுவிட்டு போய்விட்டார். அவர் வந்தால் ஒரு அறைகூட விட தோன்றுகிறது.
யாரு என்ன சொன்னாலும் என் கணவரின் குடும்பம் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறது. அவர்கள் இதுவரை என்னை ஒரு வார்த்தை கூட தவறாக சொல்லவில்லை. பிறகு தெலுங்கில் நடிக்கும் முயற்சியில் இருந்தபோது, தமிழில் விஜய் டிவியில் இருந்து சின்னத்தம்பி சீரியலுக்கு அழைப்பு வந்தது. அதில் நடித்தேன். கொஞ்சம் நல்ல பெயரை அந்த சீரியல் பெற்றுத்தந்தது.
எனக்கு அதன் பிறகும் ஒரு உறவு உண்டானது. ஆனால் அது திருமணத்தில் சென்று முடியவில்லை. வாழ்நாள் முழுக்க தனியாகதான் இருக்க வேண்டும் என்பது தான் என் நிலை போல.. என நினைத்துக் கொண்டிருந்தபோது தான் மீண்டும் பிக்பாஸில் இருந்து அழைப்பு வந்தது” என தன் கதையை சொல்லி முடித்தார். அனைவரும் அவரது உருக்கமான கதையை கேட்டு ஆறுதல் கூறி அணைத்துக் கொண்டனர்.