பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக இருப்பவர்தான் பாவனி ரெட்டி. விஜய் டிவி சீரியல்களில் பிரபலமான பாவனி ரெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளே தனது உருக்கமான கதையை சொல்லி இருந்தார்.
அதன்படி மிக இளம் வயதில் திருமணம் செய்துகொண்டு வீட்டு விஷயங்களை பார்க்கலாம், குழந்தைகளை கவனித்துக்கொண்டு சுதந்திரமாக இருக்கலாம் என்றெல்லாம் கனவுகண்ட தன் வாழ்க்கையை புரட்டிபோடும்படியாக, தமது கணவர் தற்கொலை செய்துவிட்டதாகவும், அதே சமயம் தமது கணவரின் குடும்பம் தனக்கு ஆறுதலாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனக்கும் கோபம் வரும் என்பதை பலர் உணர்வதில்லை. தனக்கும் கோபம், குறும்பு எல்லாம் உண்டு என்று பாவனி கூறியிருந்தார்.இதனை கேட்டு ரசிகர்கள் பலரும் தொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் ஜாலியாக இருக்க தொடங்கியிருக்கும் பாவனி ரெட்டி அவ்வப்போது தம்முடைய கணவர் தற்கொலை செய்துகொண்டது அல்லது இறந்தது பற்றி கேட்டால் கொஞ்சம் எமோஷனலாகி விடுவார்.
அந்த வகையில் தன்னுடைய கணவர் இறந்தபோது, தான் அழவே இல்லை என்றும், மாறாக.. என்ன நடந்தது? என்று நினைத்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்ததாகவும் எமோஷனலாக பேசியிருந்தார். இந்த காட்சி புரோமோவில் வெளியாகி மிகவும் உருக்கமாக இருந்தது. ஆனால் இந்த காட்சி எபிசோடில் வரவில்லை என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர்.
இதேபோன்று அபிஷேக்கின் சில காட்சிகளும் மேலும் பிக்பாஸ் வீட்டின் ரூல்ஸை ராஜூ படித்து காட்டும் சில காட்சிகளும் புரோமோவில் காணப்பட்டன. ஆனால் எபிசோடுகளை பார்க்கும் பொழுது அந்த காட்சிகள் இல்லை என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
பாவனியை பொருத்தவரை தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இன்னும் ஜோவியலாக அனைவருடனும் பழக தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் தமிழ்ச்செல்வி முதல் நாள் எப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார் என்பதை பாவனி நடந்து வந்து நடித்துக் காட்டினார். இமான் அண்ணாச்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாவனி அவ்வாறு நடித்துக் காட்டி இருந்தார். இந்த காட்சியும் வைரலாகி இருக்கிறது.