பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பலவிதமான கட்சிகளையும் அவற்றுக்கான கொடி, புரட்சிகர வாசகங்கள், பிரச்சார வாசகங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கி பேசியும் கோஷமிட்டும் வருகின்றனர்.
உரக்கச் சொல், மக்கள் குரல், NNK என மூன்று கட்சிகளுக்கான அணியினராக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ராஜூவின் முந்தைய விமர்சன கருத்து மீண்டும் விவாதத்துக்குள்ளானது. முன்னதாக பாவனி மற்றும் அபினய் இருவரிடையே இருந்த உறவு குறித்து ராஜூ பேசியிருந்த கருத்து பரபரப்பானது.
குறிப்பாக ட்ரூத் ஆர் டேர் விளையாடும்போது, தன் மனதில் கேட்டதாய் சொன்ன ராஜூ, அபினய்யிடம் “பாவனிய லவ் பண்றியா?” என கேட்டார். இதன் தொடர்ச்சியாக இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கட்சிகள் மீது மற்ற கட்சிகளால் விமர்சனங்கள் எழுந்தன. இதில் ஒரு விமர்சனமாக ராஜூ, ஏற்கனவே பேசிய இந்த பேச்சும் பிரச்சனைக்குரியதாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனை உரக்கச்சொல் கட்சியை சேர்ந்த பிரியங்கா முன்னெடுக்க, அதன் தொடர்ச்சியாக பாவனி மற்றும் ராஜூவிடையே வாதம் எழுவதை ப்ரோமோவில் காண முடிகிறது. அதில், கொதித்தபடி பேசும் பாவனி, “நான் அவருடன் தனியாக உட்கார்ந்து பேசுவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை? நீ யார் இதைக் கேட்பதற்கு? உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது? நான் அவரிடம் எப்படி பேசினால் உனக்கு என்ன??” என்று ஆவேசமாக கேட்கிறார்.
இதனிடையே அங்கு வந்த சிபி, “நானும் அபினய் மற்றும் பாவனி இருவரிடையே இருப்பது லவ்வும் இல்லை பிரண்ட்ஷிப்பும் இல்லை என்று தானே கூறினேன்?” என்று கூறுகிறார். முன்னதாக பிக்பாஸ் வீட்டின் கட்சித் தலைவர்கள் மற்ற ஹவுஸ்மேட்ஸ் பற்றி முன்வைத்த கருத்துக்களின்போது, சிபி இந்த கருத்தை முன்வைத்திருந்தார். இதற்கு அனைவரும் யெஸ் அல்லது நோ என தங்கள் கருத்தை சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து பேசிய சிபி, தனக்கு தோன்றியதைத்தான் பேச முடியும் என்று சண்டை போட, ஆவேசமாகும் பாவனி, “அது என்னுடைய பெர்சனல் என்றால் எப்படி பேச முடியும்?” என்று பாவனி அழுதபடி கோபமாக கேட்க, மீண்டும் சிபி, “அது பெர்சனல் இல்லை. நான் பேசுவேன்” என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.