பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிரபல போட்டியாளர் அமீரிடம், தான் சொன்னதை குறிப்பிட்டு, அமீரிடம் பாவனி மன்னிப்பு கேட்டுள்ளார்.
முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் விருதினராக வந்த பாவனியின் சகோதரி பாவனியிடம், “நீ அமீரை தம்பியா தான் பாக்குற.. ஆனா அவன், அவன் விளையாட்டை தான் விளையாடுகிறான். அப்படித்தான் வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு படுகிறது! பார்த்துக்கொள்” என கூறினார். அவர்கள் சென்ற பின், பாவனியிடம், அமீர் இதுபற்றி கேட்டபோது பாவனி, “யார் என்ன சொன்னா என்ன?.. நான் மைண்ட்ல ஏத்திக்கிட்டேனா என்ன? அதன் செஞ்சாதான் உண்டு!” என சமாதானம் கூறினார்.
இதனை அடுத்து ஒரு தருணத்தில் அமீருடன் பாவனி மெல்லிய நடனம் ஆடினார். அப்போது ராஜூ இவர்களை டைரக்ட் செய்வது போல ஆக்ஷன் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது பாவனியிடம் அமீர் ப்ரொபோஸ் செய்தார், “ஐ எம் மேட்லி.. டீப்ளி இன் லவ் வித் யூ.” என்றார். அதற்கு பாவனியோ, “சீரியஸ்லி.. ஐ டோன் ஹேவ் எனி ஃபீலிங் ஆன் யு” என்றார்.
பின்னர் அமீர், “உனக்கு என்னை பிடிக்குமா?” என அமீர் கேட்க, “உன்ன ஃப்ரண்டா பிடிக்கும்.. ஆனா நீ சீரியஸா பேசுற.. என் பின்னாடி வந்தீன்னா ஒரு நாளைக்கு உனக்கே தெரியும்.” என்று சொல்ல, “நான் சீரியஸா சொன்னேன்னு யாரு சொன்னா?” என அமீர் கேட்டார். அதற்கு பின்னர் பாவனி, “ஆமா.. நீ எப்பவும் சீரியஸாதானே சொல்லுவ?” என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் படுக்கப் போகும் முன், ஏதோ நினைவுக்கு வந்தவராய், அமீரிடம் பேசிய பாவனி, “அமீர், நீ பண்ணுவதை நான் சீரியஸாக எடுத்துக் கொண்டதாக உனக்கு தோன்றியதா?” என்று கேட்டார். அதற்கு பதில் அளிக்கும் அமீர், “ஆமாம். இன்னைக்கு நீ பேசினது அப்படித்தான் இருந்தது. திட்டுறமாதிரி இருந்தது. முகத்துக்கு நேரே சொல்ற மாதிரி இருந்துச்சு. அதுக்கு அப்புறம் தான் நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆனேன்.” என்று சொல்கிறார்.
இதனால் மீண்டும் பாவனி, “அய்யோ.. அந்த மாதிரி பாத்து சொன்னேனா? என் வாய்ஸ் டோன் அந்த மாதிரி இருந்ததால் அப்படி உனக்கு தோன்றியிருக்கும்.. நான் உன்னை பார்த்தேன். நீ கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டாய். நான் சொன்னது உன்னை காயப்படுத்தி இருந்தால் மன்னிச்சிடு. நான் சாதாரணமாக சிரித்தபடிதானே சொன்னேன்!” என சொல்லி சமாதானப் படுத்தினார்.