Reliable Software
www.garudavega.com

VIDEO: மனைவினா சுயமரியாதை இருக்க கூடாதா?.. பொறுமைக்கும் எல்லை உண்டு - 'பத்தினி' குறும்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் காயத்ரி ஷங்கர், ராஜேஷ் பாலச்சந்திரன் நடிப்பில் Behindwoods Tv-யில் வெளியாகியுள்ள குறும்படம் பத்தினி (The Loyal Wife).

Paththini Short film Gayathrie directed keerthiswaran பத்தினி

இந்த குறும்படத்தில் அருண் விஜய்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாஷ் எடிட்டிங் செய்துள்ளார். பல்வேறு சூழ்நிலைக் காரணமாக ஆணாதிக்கத்தை சகித்துக்கொண்டு சுயமரியாதையை இழந்துவாழும் பல சராசரி மனைவிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது படம்.

மனைவி என்கிற ஒரே காரணத்துக்காக அடிப்பது, துன்புறுத்துவது, சந்தேகப்படுவது உள்ளிட்ட விஷயங்களை தொடர்ச்சியாக செய்யும்போது ஒரு கட்டம் வரையில் பொறுமையாக இருக்கும் பெண்கள் பலர் இறுதியில் ஒன்று தங்களுக்கே சுய தண்டனை கொடுத்துக் கொள்கிறார்கள். .

Paththini Short film Gayathrie directed keerthiswaran பத்தினி

இங்கு காயத்ரி அந்த தவறுகளை செய்யும் தனது கணவருக்கு தண்டனை கொடுப்பதாய் முடிவு அமைகிறது. இதைக் காணும்போது மனைவி அல்லது பொதுவாக பெண் என்றால் அவருக்கென்று சுதந்திரம், உணர்வுகள் எதுவும் இருக்கக் கூடாதா? கணவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் கற்பொழுக்கம் நிறைந்த பெண்களே கணவரின் சந்தேகத்துக்கு ஆட்படுகிறார்கள் என்பன போன்ற நிதர்சனத்தை இந்த படம் உணரவைக்கிறது.

இந்த முழு குறும்படத்தை இணைப்பில் காணொளியை காணலாம். 

VIDEO: மனைவினா சுயமரியாதை இருக்க கூடாதா?.. பொறுமைக்கும் எல்லை உண்டு - 'பத்தினி' குறும்படம்! வீடியோ

மற்ற செய்திகள்

Paththini Short film Gayathrie directed keerthiswaran பத்தினி

People looking for online information on பத்தினி, Gayathrie, Paththini, Shortfilm will find this news story useful.