மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி திருவொத்து.
தேசிய விருது வென்ற நடிகை பார்வதி, அவுட் ஆப் சிலபஸ் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளியான பூ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். பெங்களூர் டேஸ், சார்லி, என்னு நிந்தே மொய்தீன், டேக் ஆஃப், புழு, வைரஸ், உயரே ஆகியவை இவரது முக்கிய திரைப்படங்கள் ஆகும்.
தமிழில் தனுஷ் நடித்த மரியான், கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் சில பெண்களும் ஆகியவை இவரது முக்கிய திரைப்படங்கள் ஆகும்.
தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்'படத்தில் நடித்து வருகிறார். அஞ்சலி மேனன் இயக்கிய வொண்டர் வுமன், சோனிலிவ் தளத்தில் நேரடியாக டிஜிட்டல் பிரீமியர் முறையில் நேற்று நவ.18 முதல் ஒளிபரப்பாகிறது.
நடிகைகள் நதியா, நித்யா மேனன், பார்வதி திருவொத்து, பத்மப்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரோனி ஸ்க்ரூவாலா & ஆஷி துவா சாரா இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை பார்வதி திருவொத்து, கேரளாவில் உள்ள கொச்சி நகரில் பிரசித்தி பெற்ற உணவகமான மைசூர் ராமன் இட்லி கடையில் பொடி இட்லியின் விதவிதமான உணவு வகைகளை சுவைத்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, காலை ஓட்ட பயிற்சிக்கு பின்னர் நெய் பொடி இட்லி மற்றும் வெண்ணெய் பொடி இட்லி & தோசை உண்டதாக பதிவிட்டுள்ளார்.