www.garudavega.com
iTechUS

"விஜயகாந்த் மாதிரி இருக்கேனா? நான் தோத்ததுக்கு காரணமே அதுதான்.!" - ‘சித்தப்பு’ சரவணன் BREAKS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுவயதில் இருந்து நடிகராக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்து அதற்கேற்ப நடிப்பை கற்றுக்கொண்டு நாயகனாகவும் அறிமுகமானவர் நடிகர் சரவணன். 1990 களில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியிருந்த சரவணன், "பொண்டாட்டி ராஜ்ஜியம்", "தாய் மனசு" உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அண்மையில் சாய் பல்லவி நடிப்பிலான கார்கி படத்தில் நடித்திருந்தார். இதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள நான் கடவுள் இல்லை என்ற படத்தில், சரவணன் நடித்துள்ளார்.

Paruthiveeran Saravanan Exclusive Over his film career

Also Read | “சென்னைல ஒரு தளபதி இருக்கார்னு எனக்கு இளைய தளபதினு வெச்சாங்க.. ஆனா விஜய்க்கு அந்த பட்டம்” - சரவணன் BREAKS

இதற்கிடையே சில ஆண்டுகள் எந்த படங்களிலும் தோன்றாமல் இருந்து வந்த சரவணன், கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அமீர் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகமாக இருந்தார். கார்த்தியின் முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த திரை உலகையும் திரும்பி பார்க்கவும் வைத்திருந்தது. முன்னதாக பிக்பாஸிலும் சரவணன் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் நடிகர் சரவணன் தற்போது Behindwoods நேயர்களுக்கு பிரத்தேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய சினிமா பயணங்கள் குறித்தும், தான் நடித்த கதாபாத்திரங்கள் குறித்தும் பேசி இருந்தார். குறிப்பாக விஜயகாந்த் குறித்து பேசும்போது, “விஜயகாந்த் நடித்துக் கொண்டிருந்தபோது நான் சினிமா துறைக்கு வரும்போது, எனக்கும் அவருக்கும் சுமார் 18 வயது வித்தியாசம் இருக்கிறது.

Paruthiveeran Saravanan Exclusive Over his film career

Images are subject to © copyright to their respective owners.

நான் 23 வயசுல சினிமாவில் ஹீரோ ஆகிறேன், என்னை விஜயகாந்த் சார் கூட ஒப்பிட்டாங்க. ஆனால் ரஜினிகாந்த்துக்கு பிறகு விஜயகாந்த் தான். அவர் எங்கேயோ இருக்கிறார், நான் எங்கேயோ இருக்கிறேன் என்று அப்போதே நண்பர்களிடம் சொன்னேன். ஆனால் நான் தோற்றதற்கும் அதுதான் முதல் காரணம். அவர் மாதிரியே நான் இருக்கிறேன் என சொல்லிவிட்டர்கள். ஆனால் நான் அவர் மாதிரி இருக்கிறேன். அவர் மாதிரி எனக்கு கண் இருக்கலாம். முகத்தாடை இருக்கலாம். ஆனால் என் நடிப்பு அவர் மாதிரி இருக்காது. நான் வேற மாதிரி நடிப்பேன். அவர் மாதிரி நான் நடிக்க மாட்டேன்.

ஆனால் தெரிஞ்சோ தெரியாமலோ நான் அவர் மாதிரி இருப்பதாக சொல்லிவிட்டார்கள். அதையெல்லாம் கடந்து வந்து, நான் நடிகன் என நிரூபித்துவிட்டேன். பருத்தி வீரன் தொடங்கி மீண்டும் நடிக்கிறேன். அடுத்து நான் கடவுள் இல்லை படத்தில் வில்லனாக நடித்துள்ளேன்” என பேசியுள்ளார்.

Also Read | "சரவணன் நீங்க மாட்டிகிட்டீங்க..".. பரட்டை & சித்தப்பு கேரக்டர் பத்தி ரஜினி அடித்த கமெண்ட்..

"விஜயகாந்த் மாதிரி இருக்கேனா? நான் தோத்ததுக்கு காரணமே அதுதான்.!" - ‘சித்தப்பு’ சரவணன் BREAKS வீடியோ

மற்ற செய்திகள்

Paruthiveeran Saravanan Exclusive Over his film career

People looking for online information on Bigg Boss Saravanan, Paruthiveeran chithappu, Paruthiveeran Saravanan will find this news story useful.