பொன்னியின் செல்வன் -2, படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பார்த்திபன் படத்தின் வசூல் குறித்து கணித்துள்ளார்.
அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தின்
முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.
இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் படக்குழுவினர் மற்றும் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பார்த்திபன், "எல்லா படத்துக்கும் அங்கிகாரம் கிடைக்க வேண்டும். பொன்னியின் செல்வன் படத்திற்கு நல்ல அங்கிகாரம் கிடைத்துள்ளது. முதல் பாகம் 500 கோடி ரூபாய் வரை கிடைத்துள்ளது. இரண்டாம் பாகம் அதை விட இரண்டு மடங்காக கிடைக்கும் என நம்புகிறேன்" என பார்த்திபன் பேசினார்