தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன்.
Also Read | "ஹாய்.. BIGG BOSS -ல இருந்து வந்தாச்சு" .. ராபர்ட் மாஸ்டர் வெளியிட்ட வைரல் வீடியோ!
இயக்குனர் நடிகர் பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் நடித்து இயக்கிய திரைப்படம் 'இரவின் நிழல்'.
நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் 'நந்து' எனும் சினிமா பைனான்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. இரவின் நிழல் திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், "நண்பர் ரியாஸ்” actress மும்தாஜ் உங்களை meet பண்ண time கேக்குறார்”
நான் ”என்ன விஷயம்னு கேளுங்க”
அவர் ”உங்ககிட்டதான் சொல்லனுமாம்”
பர்தாவுக்குள் மிக பாந்தமாக வணங்கி
”23 வருஷத்துக்கு முன்னால எனக்கு நீங்க செஞ்ச உதவி ஞாபகமிருக்கா!” இல்லையானேன்.
“ரொம்ப அவசியமான நேரத்தில
என்ன ஏதுன்னு கேக்காம,எதையும் எதிர்பாக்காம 15000 ரூபா கொடுத்துதவினீங்க.அதை இப்ப திருப்பி கொடுத்’துட்டு’ போலாம்னு வந்தேன்”
அதிர்ந்தேன். ‘துட்டு’ போனா வராது-உயிர் போனாலும்!!!
போனா வராத உயிரைப்போல.
என் பள்ளி ஆ’சிரியர்’ உட்பட திரும்ப கொடுக்க மனம் வராமல், எப்படியாவது காலங்கடத்தி ஏமாற்றிவிட,காலண் தன்னை கடத்தினாலாவது
(மிக சமீபமாக நெடுஞ்சோழ நண்பர்,ஒரு துணை நடிகை இப்படிப் பலர்)ஏமாற்றிவிடலாமா? என காத்திருக்கின்றனர்.
காலம் இப்படி கெட்டுக் கிடக்கையில்,என் நினைவு கிடங்கில் இல்லாத ஓருதவி நன்றியுடன் திரும்பி வந்த heart attack-கில்
அவரை அதிசயமாய் பார்த்தேன்”செஞ்ச நல்லதையே
மறந்திட்ட நீங்க எவ்வளவு பெரிய நல்லவர்”எனக் கூறிவிட்டு அமைதி தழும்ப வெளியேறினார்.
வெளிறிப்போன முகத்தோடு என் மகள் உட்பட டஜன் பேருக்காவது நடந்ததைச் சொல்லி மும்தாஜின் நன்றி குணத்திற்கே ஒரு தாஜ்மஹால் கட்டிக்கொண்டிருக்கிறேன்.
கற்றது:பிரதிபலன் நோக்காமல் இயன்றதை செய்தல்
மற்றது: செய்த உதவியை நோகாமல் மறந்துவிடல்". என பதிவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக நடிகை மும்தாஜ், "நான் பிரபலமாக இல்லாத போது சரியான நேரத்தில் செய்த உதவிக்கு நன்றி. பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் எவ்வளவோ நல்லதாக இருந்தாலும், அதை செய்வதில் தவறிழைத்து, காலப்போக்கில் மறந்துவிட்டேன். நாம் எல்லா நாளையும் இருக்கிறது என்று நினைக்கிறோம் ஆனால் பல நேரங்களில் நாளை வருவதில்லை. அல்ஹம்துலில்லாஹ் எனது நாளை முடிவடையும் முன் கடவுள் எனக்கு இதை நினைவூட்டினார். பார்த்திபன் சார், இந்தத் சினிமாவில் நான் கண்ட மிகச் சில கண்ணியமான மனிதர்களில் நீங்களும் ஒருவர், முழுமையான மனிதர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தந்தருள்வானாக அல்லாஹும்மா ஆமீன்." என பார்த்திபன் பதிவில் கமெண்ட் செய்துள்ளார்.
இது குறித்து மீண்டும் பதிவிட்ட பார்த்திபன், "திருப்பித் தருவது-திருப்தி தருவது என்பதை உணர்த்தியவரின் இப்பதிவில் ‘நாளை’ என்பதன் தத்துவத்தை உணர்த்துகிறார். தொடர்ந்தால் யாவும் … ஒருவேளை முடிந்தால் சாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்கிறார்.மனிதர்களை நேசிப்பதோடு வாசிக்கவும் செய்பவன் நான் என்பதால் எனக்கு தெரிவதை/தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்! தினமும் ஒரு நல்ல காரியம் செய்ய முயற்சிக்கிறேன். இன்றும் செய்தேன்.அதையெல்லாம் நான் வெளியில் சொல்வதில்லை. அவையாவும் என் அகத்தின் vacuum cleaner. பெருமையேத் தவிற, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல. அப்படியிருக்க இதை வெளிபடுத்த காரணம் இதில்
நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே!!!" என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
Also Read | கௌதம் & மஞ்சிமா திருமணம்.. இரண்டு குடும்பமும் ஒரே மேடையில்.. வைரலாகும் புகைப்படம்!