இயக்குநர் பார்த்திபன் தமக்கே உரிய புதிய திரைப்பட உருவாக்க ஸ்டைலால் தொடக்க காலத்தில் இருந்தே ரசிகர்களை வசீகரித்தவர்.
Also Read | பிரபல இயக்குநர் அமீரின் தாயார் மறைவு! திரையுலகம் இரங்கல்.
'ஹவுஸ்ஃபுல்', 'குடைக்குள் மழை', 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' போன்ற திரைப்படங்களில் இவரது சோதனை முயற்சிகளை பார்த்து வியக்காதோர் இல்லை. இந்த திரைப்படங்களின் வரிசையில் கடந்த 2019-ம் ஆண்டு 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தை இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்தார்.
தேசிய விருது வென்ற இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் தற்போது, ‘இரவின் நிழல்’ எனும் புதிய திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜூலை 15-ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தை, உலகின் முதல் 'நான்-லீனியர் சிங்கிள் ஷாட்' படமாக எடிட்டிங்கின் தேவை இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார் இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தினை சிங்கிள் ஷாட்டில் எடுக்கும் இந்த புதிய முயற்சியில் அனைவரும் வொர்க் ஷாப் பண்ணிக்கொண்டு நடித்துள்ளனர். ஆனால் ஒருவர் தவறு செய்தாலும் மொத்தமாய் முதலில் இருந்து படத்தை உருவாக்கும் சூழல், அதாவது ரீ-டேக் என்கிற சூழல் உருவாகிவிடும்.
இதனால் பார்த்திபன் நடிக்கும் ஒரு காட்சியில் அவருக்கு கொடுக்கப்பட்ட பிரியாணி கெட்டுப்போயிருந்தும், அவர் மொத்தமாக அனைவரின் முயற்சியும் கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக சாப்பிட்டிருக்கிறார். இந்த தகவலை அவர் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இரவின் நிழல் திரைப்படத் திரையிடலுக்கு முன்பாக அன்று ஒருநாள் மட்டும் திரையரங்கில் ஒளிபரப்பப் படவுள்ள மேக்கிங் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அதாவது, “தின்னா வர்ற கஷ்டத்த விட.. ஷூட் நின்னா வர்ற கஷ்டம் தெரியும் என்பதால் ஒரு அகோரி மனநிலையுடன் அந்த பிரியாணியை சாப்பிட்டேன்!” என குறிப்பிட்டுள்ளார். அவருடைய முயற்சிக்கும் மெனக்கெடலுக்கும், இரவின் நிழல் படத்தின் உருவாக்கத்துக்கும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து நெகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
Also Read | "வந்தியத்தேவனா நடிக்குறேன்னு அம்மாகிட்ட சொன்னேன் .. இப்படி ஒரு Lover Boy-ஆ?" - PS1 குறித்து கார்த்தி..