பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனது வசீகர அழகாலும், துறுதுறு நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சித்ரா. இவர் மிகவும் தைரியமான பெண் என்பதாலும், அவருடைய பாசிட்டிவ் குணத்தினாலும் பலருக்கும் வாழ்க்கையில் உந்துகோலாக இருந்தவர். ஆனால் திடீரென கடந்த வாரம் சித்ரா மரணம் அடைந்த செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவர் தற்கொலை செய்து கொள்ளக் கூடியவர் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்ததால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விசாரணையின் முடிவில் முதல் கட்டமாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டதால்தான் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சித்ராவை போலவே இருக்கும் பிரபலம் ஒருவர் அவரைப் போலவே போட்டோஷூட் நடத்தியுள்ளார். தொலைக்காட்சி பிரபலமான அவருடைய பெயர் கீர்த்தனா தினகர். அவர் கூறும் பொழுது "சித்ராவின் முல்லை கதாபாத்திரத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. குழுவினரும் இந்நேரம் அவருக்கு பதிலாக வேறு ஒரு சரியான தேர்வை முடிவெடுத்திருப்பார்கள். சித்ரா மீது எங்களுக்கு இருக்கும் அன்பையும் மரியாதையையும் காட்டவே இந்த போட்டோஷூட்டை நடத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
சிலர் அந்த புகைப்படங்களை நடிகை ஹேமாவின் கணவர் சதீஸுக்கு அனுப்பியுள்ளனர். ஹேமாவின் கணவர் சதீஷ் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "பலரும் சித்ராவை போலவே தான் இருப்பதாக கூறும் பெண்ணின் புகைப்படங்களை அனுப்பி வைக்கிறார்கள். அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரிடம் சொல்லி அவரை பரிந்துரைக்க சொல்கிறார்கள். முக ஜாடை அப்படியே இருந்தால் மட்டும் போதாது. அந்த நடிப்பில் உயிர் இருக்க வேண்டும். இப்படி ஒரேமாதிரி இருக்கும் ஆட்களை நடிக்க வைக்க இது சண்டைக்காட்சி கிடையாது. அந்த புகைப்படங்களை எனக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.