பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு பிரத்யேகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளன. ஒவ்வொரு தொடர்களும் விறுவிறுப்பாக செல்லும் பட்சத்தில் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறவும் செய்யும்.
Image Credit : vijay television
Also Read | ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் RC15.. செம டைட்டிலுடன் வெளியான MOTION POSTER வீடியோ!
அந்த வகையில் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இருந்து வருகிறது. சகோதரர்கள் சிலரின் இடையேயுள்ள பந்தம் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நகர்ந்து வருகிறது. ஒவ்வொரு எபிசோடிலும் ஏதாவது ஒரு விஷயம் விறுவிறுப்பாக சென்று கொண்டே இருப்பதால், மக்களும் இதனை ஆவலுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வரும் சூழலில், சுமார் 1,100 எபிசோடுகளை கடந்தும் சென்று வருகிறது.
Image Credit : vijay television
முன்னதாக, கண்ணனின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வந்தார். அவர் சமீபத்தில் விலகி இருந்த நிலையில், ஏற்கனவே ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். எப்போதும் போல பல எதிர்பாராத திருப்பங்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அரங்கேறி வரும் சூழலில், தற்போது குடும்பத்திற்குள்ளேயே ஒரு பரபர சம்பவம் வெடித்துள்ளது தெரிகிறது.
Image Credit : vijay television
ஏற்கனவே ஜீவா மற்றும் மீனா ஆகியோர் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இருந்து விலகி இனிமேல் அங்கே வரமாட்டோம் என விலகி சென்று வாழ்ந்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில், கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவும் தனது கணவருக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடம் சண்டை போடுகிறார். தனது கணவர் தவறு செய்ததாக அனைவரும் பழி போடுவதாக குறிப்பிடும் ஐஸ்வர்யா, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்த்து பேசுகிறார்.
Image Credit : vijay television
மற்றவர்களும் பதிலுக்கு பதில் பேச, கடைசியில் வீட்டை விட்டு கிளம்பவும் முடிவு செய்து ஐஸ்வர்யா வெளியேற அவரை தடுக்கவும் செய்கிறார் கணவர் கண்ணன். அப்போது "உனக்கு நான் வேண்டுமா? இல்லை இந்த குடும்பம் வேண்டுமா?" என கண்ணனிடம் ஐஸ்வர்யா கேட்க, என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் காதல் மனைவியையும், குடும்பத்தினரையும் பார்த்தபடி நிற்கிறார் கண்ணன்.
Image Credit : vijay television
இதனால், கண்ணன் எடுக்க போகும் முடிவை பொறுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்னும் பிளவுபடுவது தெரியும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஏற்கனவே ஜீவா & மீனா, திருமணத்தில் நடந்த மொய் விவகாரத்தால் மனஸ்தாபமாகி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது கண்ணன் & ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேற போகிறார்களா? என்கிற விஷயம் இன்னும் பரபரப்பாகியுள்ளது.
Also Read | நிதினுக்கு ஜோடியாக ராஷ்மிகா.. படத்தில் இணைந்த பிரபல தமிழ் இசையமைப்பாளர்! முழு விவரம்