Pakistan : பிரபல பாகிஸ்தான் நடிகை குஷ்பூ மீது சக நடிகைகள் உடைமாற்றுவதை கேமரா மூலம் படம் பிடித்த குற்றத்துக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணைய தளங்களில் தனிநபர் உரிமைகளை மிறி ஒருவரின் புகைப்படங்களை அல்லது வீடியோக்களையே பதிவிடுவது சிக்கல்களுக்கு வழிவகுக்கும் நிலையில், ஒரு நடிகை சக நடிகைகளின் உடைமாற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ள இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை இணைய உலகத்தில் மட்டுமல்லாது பாகிஸ்தான் கலையுலகத்திலும் ஏற்படுத்தியுள்ளது.
Khusboo : பாகிஸ்தான் லாகூரை சேர்ந்தவர் நடிகை குஷ்பூ. இவர் சினிமா மற்றும் மேடை நாடகங்களில் நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவராக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருக்கும் இவருடன் நாடகங்களில் நடிக்கும் சக நடிகைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாக தெரிகிறது.
லாகூரில் உள்ள பிரபல தியேட்டரில் நடைபெற்ற ஒரு மேடை நாடக நிகழ்ச்சியில்தான், குஷ்பூ தனது சக நடிகைகளுடன் பங்கேற்றிருந்தார். ஆனால், நாடக நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே குஷ்புவுக்கும் அவருடன் அதே நாடக நிகழ்ச்சியில் நடிக்கும் சக நடிகைகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கொஞ்ச நேரத்தில் வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது.
இதனை அடுத்து, நடிகை குஷ்பூ, நாடகத்தில் தொடர்ந்து நடிக்கப்படுவது குறித்து சக நடிகைகள் முடிவெடுத்ததாகவும், இதன் காரணமாக நாடகத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குஷ்பூ வெளியேறிவிட்டார். ஆனாலும் நடந்த இந்த சம்பவத்தில் சக நடிகைகள் தன்னை நடிக்கவிடாத காரணத்தால் குஷ்பூ ஆத்திரப்பட்டு, அந்த நடிகைகள் உடைமாற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக கூறி வழக்கப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக ஆத்திரத்தில் இந்த முடிவை எடுத்த, குஷ்பூ, நாடக அரங்கில் பணியாற்றும் காஷிப் கான் என்பவரிடம் பேசி, அவருக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அவர் மூலம், அந்த சக நாடக நடிகைகள் உடைமாற்றக் கூடிய குறிப்பிட்ட அறையில் ஒரு கேமராவை பொருத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் கேமராவில் பதிவான அந்தக் காட்சிகளை வெளியிடப்போவதாக முதலில் சக நடிகைகளிடம் கூறி மிரட்டிய குஷ்பூ, பின்னர் அந்தக் காட்சிகளை சமூக வலைப்பக்கங்களில் பதிவேற்றியதை அடுத்து, அதன் பின் காவல்துறையினரிடத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், குஷ்பூ மற்றும் காஷிப் கான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
ஆனால், நடிகை குஷ்பூ தன்னை கைது செய்வதற்கு கோர்ட்டில் தடை வாங்கியதாகவும், அவரை கைது செய்வதற்கான கோர்டாரின் தடை உத்தரவு, வரும் 21-ம் தேதி வரை இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.