பா. ரஞ்சித் - விக்ரம் இணையும் புதிய படத்தின் தகவல் கிடைத்துள்ளது.
பா. ரஞ்சித், நடிகர் விக்ரம் நடிப்பில் சியான்61 என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது.
இந்த படத்திற்கு 'மைதானம்' என பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. இப்படம் ஸ்டூடியோ கிரீனின் 23வது தயாரிப்பு ஆகும்.
சில நாட்களுக்கு முன் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிரத்யேகமாக பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் உருவாக உள்ளதாகவும், 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். பான் இந்திய படமாக பெரும் பொருட் செலவில் உருவாக உள்ளது என ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நாளை (16.07.2022) அடையாறில் உள்ள National Film Development Corporation of India ல் உள்ள தாகூர் பிலிம் செண்டரில் நடை பெற உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
பா. ரஞ்சித் தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள ஒரு படத்தை காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.