தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.
Also Read | 'வெந்து தணிந்தது காடு' FDFS.. தமிழகம் முழுவதும் மாஸ் காட்டும் சிம்பு! இது வேற லெவல் சாதனை
தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கை மாற்றிய இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இவரின் பெயரை எவராலும் தவிர்க்க முடியாது.
இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். “மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது.
இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, சென்ற ஆண்டு கிறிஸ்துமசை முன்னிட்டு வெளியான 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் “நட்சத்திரம் நகர்கிறது” படத்தை இயக்கினார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான Fans Festival நிகழ்ச்சியில் இயக்குனர் பா. ரஞ்சித் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக பெரியார் & அம்பேத்கர் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மேலும் "அரசியல்வாதியா பார்க்கலாமா?" என்ற கேள்விக்கு, "அரசியல்வாதியாக ஆவேனா என தெரியவில்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் கலை & இலக்கியம், பண்பாடு சார்ந்தே இருக்கும். அது தான் என் இலக்கு. அரசியலுக்கு வந்து தேர்தலில் நிற்பது பிரச்சினை இல்லை. அதையும் மகிழ்ச்சியாக எடுத்து கொள்வேன். இப்போ அரசியல் தேவையில்லை என்று நினைக்கிறேன்." என பா. ரஞ்சித் பதில் அளித்துள்ளார்.
Also Read | VIDEO: விஜய் நடிப்பில் "யோஹன் அத்தியாயம் ஒன்று" ஸ்டேட்டஸ் என்ன?.. மனம் திறந்த கௌதம் மேனன்.!