பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் சேத்துமான் என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Also Read | "சைக்கிளிங் பண்ண இதான் செம Climate.." சென்னையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாஸ்..
நீலம் புரொடக்ஷன்ஸ்..
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கிய பா ரஞ்சித் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகியுள்ளார். தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல வித்தியாசமான படைப்புகளை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
நீலம் தயாரிப்புகள்…
நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முதல் படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டுகளை இந்த படம் பெற்றது. அடுத்தடுத்து நீலம் தயாரிப்பில் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்' ஆகிய படங்கள் வெளியாகின. சமீபத்தில் நீலம் புரொடக்ஷன்ஸின் ஐந்தாவது தயாரிப்பாக ‘J பேபி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். அட்டகத்தி தினேஷ், ஊர்வசி மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஓடிடியில் சேத்துமான் ….
இந்நிலையில் தற்போது நீலம் புரொடக்ஷன்ஸின் அடுத்த தயாரிப்பாக ‘சேத்துமான்’ என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை திரைக்கதை எழுதி தமிழ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கான கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளார். படத்துக்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிந்து மாலினி இசையமைத்துள்ளார். சி எஸ் பிரேம்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் மே 27 ஆம் தேதி முதல் பிரிமீயர் ஆக உள்ளது.
கவனம் ஈர்த்த டீசர்…
இந்த அறிவிப்போடு தற்போது சேத்துமான் படத்தின் டீசரும் இணையத்தில் வெளியாகியுள்ளது. வசனங்கள் எதுவும் இல்லாமல் முழுக்க காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றைக் கொண்டே டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான டீசர் படத்தை பார்க்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8